கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
ADDED : ஜூலை 08, 2024 05:32 AM

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் பஜார் பகுதியில் போலி மருத்துவர் மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் படி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் மாலை கன்னிகைப்பேர் பஜார் பகுதியில் இயங்கி வரும் சூர்யா மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
இதில் மருத்துவம் பார்த்து வந்த கவரப்பேட்டை ரஹீம், 55 என்பவர் பி.எஸ்சி., பட்டப் படிப்பு முடித்து மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து துணை இயக்குனர் மீரா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து, ரஹீமை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.