ADDED : ஜூன் 15, 2024 11:05 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வாலாஜாபாத்தில் இன்று இலவச கண் மருத்துவ முகாம் நடத்த உள்ளது.
வாலாஜாபாத் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை நீக்குதல், கருவிழி புண், பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என, வாலாஜாபாத் அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.