Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை காலம் நீட்டிப்பு

பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை காலம் நீட்டிப்பு

பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை காலம் நீட்டிப்பு

பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை காலம் நீட்டிப்பு

ADDED : ஜூலை 15, 2024 02:37 AM


Google News
காஞ்சிபுரம்:பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை மட்டுமல்லாமல் பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. பிறப்பு சான்றிதழ் பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், வெளிநாட்டில் குடியுரிமை பெற தேவைப்படும் ஆவணமாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து மூலம் உறுதிமொழியை, பிறப்பு பதிவாளரிடம் இலவசமாக பெயர் பதிவு செய்யலாம்.

மேலும் 12 மாதங்களுக்குப்பின், 15 ஆண்டுகளுக்குள் 200 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது.

இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 2000ம் ஆண்டு ஜன., 1ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள், 2000ம் ஆண்டை கணக்கில் கொண்டு, 15 ஆண்டுகள் என, 2014, டிச.,31 வரை பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய கால வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிறப்பு சான்றிதழில் நிறைய பெயர்கள் பதிவு செய்யப்படாததால், ஐந்து ஆண்டு காலம் அவகாசம் கொடுத்து, 2019, டிச.,31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பெயர் பதிவு செய்ய அவகாசம் தேவைப்பட்டதால், மேலும் ஐந்து ஆண்டு காலம் அதாவது, 2024 டிச., 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி கமிஷனர், தாசில்தார், பேரூராட்சி அலுவலர் ஆகியோரிடம் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us