/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சகதியான சாலை சீரமைக்க வலியுறுத்தல் சகதியான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
சகதியான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
சகதியான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
சகதியான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 06:57 AM

வையாவூர் வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் காலனி, எல்லையம்மன் கோவில் தெரு, தெற்கு பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. மண் சாலையாக இருப்பதால், சாதாரண மழைக்கே சகதி சாலையாக மாறிவிடுகிறது.
இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும், சேற்றில் நிலை தடுமாறி வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, எல்லையம்மன் கோவில் தெருவிற்கு விடுபட்ட இடத்தில், சிமென்ட் சாலை அமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.