/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒழையூரில் சாலையோர பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல் ஒழையூரில் சாலையோர பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
ஒழையூரில் சாலையோர பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
ஒழையூரில் சாலையோர பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
ஒழையூரில் சாலையோர பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 12:46 AM

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் பிரதான சாலையில் இருந்து, ஒழையூர் கிராமத்திற்கு செல்லும் சாலை 2 கி.மீ., துாரமுடையது. இச்சாலையில், மழையின் காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.