/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோளிவாக்கம் நுாலக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல் கோளிவாக்கம் நுாலக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
கோளிவாக்கம் நுாலக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
கோளிவாக்கம் நுாலக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
கோளிவாக்கம் நுாலக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2024 10:59 PM

கோளிவாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நுாலகம் இயங்கி வருகிறது.
நுாலகத்தில் உள்ள தினசரி நாளிதழ்களை வாசிக்கவும், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உள்ள நுால்களை வாசிக்க தினமும் முதியோர், இளைஞர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் என, 75க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
நுாலக கட்டடத்தில்கட்டப்பட்டுள்ள கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் மட்டுமின்றி, நுாலகரும் இயற்கை உபாதை கழிக்க அவதிப்படுகின்றனர்.
நுாலகம் அருகிலேயே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இருந்தும், கழிப்பறைக்கு குழாய் இணைப்பு வழங்கி தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், கழிப்பறை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, நுாலக கட்டடத்தில் உள்ள கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோளிவாக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.