ADDED : ஜூன் 01, 2024 06:04 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்புக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று காஞ்சிபுரம் தனியார் திருமண மண்படத்தில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக அஜய்குமார், செயலராக வெங்கடேசன், பொருளாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
துணை தலைவராக அன்னக்கிளி, இணை செயலராக சுகுணாமேரி, செயற்குழு உறுப்பினர்களாக வள்ளியம்மாள், வடிவுக்கரசி, லெனின்குமார், சண்முகம், சார்லஸ், மூர்த்தி, ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.