/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
ADDED : ஜூன் 04, 2024 06:03 AM

காஞ்சிபுரம், : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் பணிகள், காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லுாரியில் இன்று நடைபெறுகிறது.
ஓட்டு எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனி ஓட்டு எண்ணும் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு 14 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு எட்டு மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் பணிக்கு, 950 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
ஓட்டு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என நான்கு பேர் இடம் பெறுவர்.
இந்த, நான்கு பேரும், எந்த சட்டசபை தொகுதிக்கான அறையில் பணியாற்றுவர் என, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, எந்த அதிகாரி எந்த ஓட்டு எண்ணும் அறையில்பணியாற்றுவார் என கணிக்க முடியாதபடி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதையடுத்து, சட்டசபை தொகுதிக்குள்ளேயே குலுக்கல் முறையில், 14 மேஜைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்த அதிகாரி, எந்த மேஜையில் அமர்ந்து பணியாற்றுவார் என்பதையும் இதன் மூலம் முன்கூட்டியே கணிக்க முடியாது.
ஓட்டு எண்ணும் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், இதுபோன்ற குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையின் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.