/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மதுபோதையில் ஏரியில் விழுந்தவர் சடலமாக மீட்பு மதுபோதையில் ஏரியில் விழுந்தவர் சடலமாக மீட்பு
மதுபோதையில் ஏரியில் விழுந்தவர் சடலமாக மீட்பு
மதுபோதையில் ஏரியில் விழுந்தவர் சடலமாக மீட்பு
மதுபோதையில் ஏரியில் விழுந்தவர் சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 02:47 AM
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஏரியில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்படி, அங்கு சென்ற போலீசார், ஏரியில் மிதந்த உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், கீவலுாரைச் சேர்ந்த நித்திய குமார், 38, என்பதும், மது பழக்கத்திற்கு அடிமையானவர், 10 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏரியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.