ADDED : ஜூலை 25, 2024 10:08 PM
படப்பை:ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 45; ஓட்டுனர். நேற்று முன்தினம் மாலை, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் சாலையில், 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார்.
சோமங்கலம் அருகே அமரம்பேடு பகுதியை கடந்தபோது, அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வத்தை, அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.