/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டும் தி.மு.க., பிரமுகர்.. ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டும் தி.மு.க., பிரமுகர்..
ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டும் தி.மு.க., பிரமுகர்..
ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டும் தி.மு.க., பிரமுகர்..
ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டும் தி.மு.க., பிரமுகர்..
ADDED : ஜூலை 08, 2024 05:41 AM

கூடுவாஞ்சேரி: நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், நந்திவரம் பெரிய ஏரி உள்ளது. ஏரி கரையோர பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து, அதில் வீடு கட்டும் பணியில், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., பெண் பிரமுகர் ஈடுபட்டு வந்தார்.
இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் கொடுத்த புகாரின்படி, நந்திவரம் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றினார்.
இந்நிலையில், நேற்று அதே இடத்தில் வீடு கட்டும் பணி, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நீர் நிலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டக் கூடாது என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதை மீறி, ஏரி கரையோரம் ஆக்கிரமித்து வீடு கட்டும் பணியில், தி.மு.க., பெண் பிரமுகர் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே, அது குறித்து புகார் அளிக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று மீண்டும் அந்த இடத்தில் பேவர் பிளாக் கல் பயன்படுத்தி, வீடு கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, நீர்நிலையை ஆக்கிரமிக்க முயலும் தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.