Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டிவிஷன் கிரிக்கெட் போட்டி டிராட்டர்ஸ் சி.சி., அணி வெற்றி

டிவிஷன் கிரிக்கெட் போட்டி டிராட்டர்ஸ் சி.சி., அணி வெற்றி

டிவிஷன் கிரிக்கெட் போட்டி டிராட்டர்ஸ் சி.சி., அணி வெற்றி

டிவிஷன் கிரிக்கெட் போட்டி டிராட்டர்ஸ் சி.சி., அணி வெற்றி

ADDED : ஆக 07, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
சென்னை,

டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.

மூன்றாவது டிவிஷன் 'பி' பிரிவில் நடந்த போட்டி: பெருங்களத்துார் சி.சி., மற்றும் டிராட்டர்ஸ் சி.சி., அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட் செய்த பெருங்களத்துார் சி.சி., அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்தது.

அணி வீரர் விஜய், 116 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்தார். எதிர் அணியின் வீரர் பிரணீஷ் 5 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து பேட் செய்த டிராட்டர்ஸ் சி.சி., அணி, 44.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஐந்தாவது டிவிஷன் 'ஏ' பிரிவில் நடந்த போட்டிகள்: எம்.சி.சி., அணி மற்றும் 'ஏர் இந்தியா' எஸ்.சி., அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் துரைராஜ் எம்.சி.சி., அணி, 49.5 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அணியின் வீரர் காமேஷ்குமார், 107 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 117 ரன்களை அடித்தார். எதிர் அணியின் வீரர் நவநீதராஜ், 5 விக்கெட் எடுத்தார்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய 'ஏர் இந்தியா' அணிக்கு எம்.சி.சி., பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். அந்த அணி, 32.2 ஓவர்களில் 98 ரன்களில் சுருண்டது.

எம்.ஆர்.சி., 'பி' மற்றும் நுங்கம்பாக்கம் சி.சி., அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், முதலில் பேட் செய்த எம்.ஆர்.சி., அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 234 ரன்கள் அடித்தது.

எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய நுங்கம்பாக்கம் சி.சி., அணி, 46.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எம்.ஆர்.சி., வீரர் பிரதாப் 5 விக்கெட் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us