ADDED : ஜூலை 22, 2024 03:59 AM

காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சம்பா பருவம் என, அழைக்கப்படும் ஆடி மாதத்தில், நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவு செய்வது உள்ளிட்ட பல வித பணிகளை, விவசாயிகள் செய்து வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த, மருதம், காரை, கரூர், புத்தகரம் ஆகிய கிராமங்களில், நேரடியாக டிராக்டர் மூலமாக நெல் விதைக்கும் பணியை, விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
குறைந்த தண்ணீர் இருக்கும், ஏரி நீர் பாசனம் பெறும் நிலங்களிலும், நெல் விதைக்கும் பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.