/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 12:31 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவணிப்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நியாய விலைக்கடை கட்டடம் மிகவும் பழுதடைந்ததையடுத்து, அதே பகுதியில் அருகாமையில் உள்ள அசேபா தொண்டு நிறுவன கட்டடத்தில் தற்போது ரேஷன் கடை இயங்குகிறது. எனினும், இக்கட்டடமும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக உள்ளதால், பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையிலான கைவிடப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அதே இடத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவணிப்பாக்கம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.