/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம் அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்
அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்
அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்
அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்
ADDED : ஜூன் 10, 2024 05:06 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெருவில், 2006ம் ஆண்டு மாநகராட்சி பொது நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அங்கன்வாடி கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளடைவில் அங்கன்வாடி மைய கட்டடம் முற்றிலும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, அங்கன்வாடி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்றுவதோடு, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.