/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இரும்புலியூரில் திருடர்களை துரத்தி பிடித்தவருக்கு வெட்டு... இரும்புலியூரில் திருடர்களை துரத்தி பிடித்தவருக்கு வெட்டு...
இரும்புலியூரில் திருடர்களை துரத்தி பிடித்தவருக்கு வெட்டு...
இரும்புலியூரில் திருடர்களை துரத்தி பிடித்தவருக்கு வெட்டு...
இரும்புலியூரில் திருடர்களை துரத்தி பிடித்தவருக்கு வெட்டு...
ADDED : ஜூன் 24, 2024 05:25 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே இரும்புலியூர், சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 29. அதே பகுதியில் வசிக்கும் ஜெகன்நாதன் என்பவரது 'பல்சர்' ரக பைக்கை, நேற்று காலை, மர்ம நபர்கள் மூவர் திருடிச் சென்றனர். அவ்வழியே சென்ற பிரேம்குமார், இதை பார்த்துள்ளார்.
இதையடுத்து, தன் நண்பர்கள் சக்திவேல், 28, அருண்குமார், 29, ஆகியோருடன் சேர்ந்து, பைக் திருடர்களை பிடிக்க, தன் வாகனத்தில் விரட்டிச் சென்றார்.
ஜி.எஸ்.டி., சாலையில், இரும்புலியூர் சிக்னல் அருகே, பைக் திருடர்களை மடக்கிப் பிடித்துள்ளார்.
அப்போது பைக்கை விட்டு கீழே இறங்கிய மர்ம நபர்கள், பிரேம்குமாரை கத்தியால் வெட்டியுள்ளனர்.
பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில், திருடிய பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடினர்.
காயமடைந்த பிரேம்குமாருக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் எட்டு தையல் போடப்பட்டது. அவர், சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.
இது குறித்த அவரதுபுகாரின்படி, தாம்பரம்போலீசார் வழக்கு பதிந்து, கத்தியால் வெட்டி தப்பிய பைக் திருடர்கள் மூவரை தேடுகின்றனர்.