/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை
கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை
கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை
கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை
ADDED : ஜூலை 27, 2024 07:11 AM

ஆலந்துார்: கத்திப்பாரா மேம்பாலத்தில், 50 அடி உயரத்தில் இருந்து குதித்து எம்பி.ஏ., பட்டதாரி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை, ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலத்தில்,கிண்டி, -ஈக்காடு தாங்கலில் இருந்து மீனம்பாக்கம்நோக்கி இருசக்கர வாகனத்தில் வாலிபர் நேற்று சென்று கொண்டிருந்தார்.
திடீரென வாகனத்தை கத்திப்பாரா மேம்பாலத்தின் சுவர் ஓரம் நிறுத்தினார்.
பின், மேம்பாலத்தின் மேல் ஏறி, 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதில், அவரின் கைகள் உடைந்து, நெற்றியில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த பரங்கி மலை போலீசார் அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபர்விருகம்பாக்கம், சி.ஆர்.ஆர்.,புரம், எல் அண்டு டிகாலனியை சேர்ந்த சாமுவேல்ராஜ், 23, எனதெரிய வந்தது.
காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., முடித்த இவர், மாநில அளவிலான கிரிக்கெட்போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்து கிரிக்கெட் பயிற்சிக்குபுறப்பட்டு செல்லும் போது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் அணிக்குதேர்வாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் எனகூறப்படுகிறது.