/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மோதிய கன்டெய்னர் லாரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மோதிய கன்டெய்னர் லாரி
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மோதிய கன்டெய்னர் லாரி
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மோதிய கன்டெய்னர் லாரி
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மோதிய கன்டெய்னர் லாரி
ADDED : ஜூன் 29, 2024 01:27 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் குண்ணம் ஊராட்சியில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையையொட்டி, வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை சுங்குவார்சத்திரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் வி.ஏ.ஓ., அலுவலகத்தின் ஒருபகுதி சுவர் இடிந்து விழுந்தது. விபத்தின் போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 50, என்பவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து குண்ணம் வி.ஏ.ஓ., சதீஷ், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.