ADDED : ஜூன் 29, 2024 10:09 PM
காஞ்சிபுரம்:திருக்காலிமேட்டில், ஆனந்த விநாயகர் கோவில் தெருவில், சுந்தர வேலன் என்பவரது வீட்டில், ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட உணவு வழங்கல் அலுவலர்பாலாஜி தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், சுந்தரவேலன் வீட்டில், 100 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, ஆவணங்கள் இன்றி இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுந்தரவேலனிடம் விசாரித்து வருகின்றனர்.