/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு 250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : மார் 14, 2025 12:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 940 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் வாயிலாக, கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்கள் என, 74,853 பேர் பயன் பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 5,998 கர்ப்பிணியர் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமுதாய வளைகாப்பு விழா, ஒவ்வொரு ஆண்டும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணியருக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், சமூக நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த, 111 பயனாளிகளுக்கு 1.12 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கமும் மற்றும் திருமண நிதியுதவியையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.
மேலும், 74 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை திட்டங்களின் கீழ், 9.48 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.