/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோர கால்வாய் தடுப்பிற்கு 'வெல்டிங்' பணி துவக்கம் சாலையோர கால்வாய் தடுப்பிற்கு 'வெல்டிங்' பணி துவக்கம்
சாலையோர கால்வாய் தடுப்பிற்கு 'வெல்டிங்' பணி துவக்கம்
சாலையோர கால்வாய் தடுப்பிற்கு 'வெல்டிங்' பணி துவக்கம்
சாலையோர கால்வாய் தடுப்பிற்கு 'வெல்டிங்' பணி துவக்கம்
ADDED : ஜூலை 02, 2024 03:05 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில்,41 கி.மீ., இருவழிச்சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடதிட்டத்தில், நான்குவழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை யில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை ஓரம், எம்-சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், கால்வாய் ஓரம், இரும்பிலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இருக்கும் போல்ட் திருகி இரும்பு கம்பிகள் மாயமாகும் சூழல் இருந்தது.
இதுகுறித்து, ஒரு சில விவசாயிகள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் போல்ட் திருடாத அளவிற்கு வெல்டிங் அமைக்கும் பணியை நேற்று துவக்கியுள்ளது.
இதன் மூலமாக, சாலையோரம் அமைக்கப்பட்ட இரும்பிலான தடுப்பு திருடு போக வாய்ப்பு இல்லை என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.