/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கல்லுாரி சுற்றுச்சுவர் சீரமைப்பு.. கல்லுாரி சுற்றுச்சுவர் சீரமைப்பு..
கல்லுாரி சுற்றுச்சுவர் சீரமைப்பு..
கல்லுாரி சுற்றுச்சுவர் சீரமைப்பு..
கல்லுாரி சுற்றுச்சுவர் சீரமைப்பு..
ADDED : ஜூன் 24, 2024 05:34 AM

காஞ்சிபுரம்: நாடு முழுவதும், ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அறிஞர் அண்ணா பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில், சட்டசபை தொகுதி வாரியான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்தனர்.
இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு, துணை ராணுவம், போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தன.
ஜூன்- 4ம் தேதி ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. பல்வேறு அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதால், அறிஞர் அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு, சுற்றுச்சுவர் கட்டும் பணியை, பொதுப்பணித் துறையினர் நிறைவு செய்து உள்ளனர்.
புதிய சுற்றுச்சுவருக்கு, வர்ணம் அடித்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.