/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தைலாவரம் டீ கடையில் கல்லுாரி மாணவர்கள் மோதல் தைலாவரம் டீ கடையில் கல்லுாரி மாணவர்கள் மோதல்
தைலாவரம் டீ கடையில் கல்லுாரி மாணவர்கள் மோதல்
தைலாவரம் டீ கடையில் கல்லுாரி மாணவர்கள் மோதல்
தைலாவரம் டீ கடையில் கல்லுாரி மாணவர்கள் மோதல்
ADDED : ஜூன் 10, 2024 05:22 AM
கூடுவாஞ்சேரி, : கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள ஒரு டீ கடையில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கல்லுாரி மாணவர்கள் டீ அருந்தினர்.
அப்போது, அவர்களில் இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதல், கைகலப்பாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதில், இருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவ்வழியாக சென்ற பகுதிவாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்ததும், மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக, யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.