/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் மேம்பால பணிகளை தரமாக அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல் வாலாஜாபாதில் மேம்பால பணிகளை தரமாக அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
வாலாஜாபாதில் மேம்பால பணிகளை தரமாக அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
வாலாஜாபாதில் மேம்பால பணிகளை தரமாக அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
வாலாஜாபாதில் மேம்பால பணிகளை தரமாக அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 02:01 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் அட்டை சேர்க்கை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவளூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அங்குள்ள மருந்தக அறையை பார்வையிட்டு மருந்துகளின் இருப்பு நிலவரங்களை மருத்துவரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நெய்குப்பம் கிராமத்தில், மஹாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய குளம் வெட்டும் பணியை பார்வையிட்டார்.
பணியின் செயல்பாடுகள் குறித்து பணிதள பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளிடத்தில் கேட்டறிந்தார். அதையடுத்து, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார்.
அங்கு மாணவர்களிடம் கற்றல் திறனை கேட்டு, பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறை உள்ளிட்டவைகளின் தூய்மையை ஆய்வு செய்தார்.
மேலும், வாலாஜாபாத் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பால பணிகளை பார்வையிட்டவர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.