/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மழைநீர் உறிஞ்சு குழாயில் அடைப்பு ரயில்வே சாலையில் மழைநீர் தேக்கம் மழைநீர் உறிஞ்சு குழாயில் அடைப்பு ரயில்வே சாலையில் மழைநீர் தேக்கம்
மழைநீர் உறிஞ்சு குழாயில் அடைப்பு ரயில்வே சாலையில் மழைநீர் தேக்கம்
மழைநீர் உறிஞ்சு குழாயில் அடைப்பு ரயில்வே சாலையில் மழைநீர் தேக்கம்
மழைநீர் உறிஞ்சு குழாயில் அடைப்பு ரயில்வே சாலையில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜூன் 08, 2024 06:11 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ராஜாஜி மார்க்கெட் அருகே உள்ள டூரிஸ்ட் வேன்கள் ஸ்டாண்ட் உள்ள பகுதியில், சாதாரண மழைக்கே மழைநீர் குளம்போல தேங்குகிறது.
மேலும், இப்பகுதியில் மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், மாநகராட்சி சார்பில், நான்கு மழைநீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாய் மற்றும் மழைநீர் உறிஞ்சு குழாய்களில் விழுந்துள்ள குப்பை குவியல்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால், நடந்து செல்லும் பாதசாரிகள் மீது மழைநீர் தெறிப்பதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், மழை நீரில் டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு உருவாகும் சூழல் உள்ளது.
எனவே, ரயில்வே சாலையில் மழை நீர் முழுதும் வெளியேறும் வகையில், வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.