/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அய்யங்கார்குளம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் அய்யங்கார்குளம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
அய்யங்கார்குளம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
அய்யங்கார்குளம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
அய்யங்கார்குளம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஆக 02, 2024 12:38 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜூலை 11ம் தேதி முதல், ஆகஸ்ட் 22 வரை, 256 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 54 இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு சேவைகளுக்கு ஒரே இடத்தில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
இதில், உத்திரமேரரூர் தி.மு.க., - -எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்றார். இம்முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்தனர். பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம்கள், நகராட்சியில் 4 முகாம்கள், பேரூராட்சியில் 3 முகாம்கள், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 15 முகாம்கள் என ஆக மொத்தம் 30 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டது.