/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம் அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
ADDED : ஜூலை 15, 2024 02:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் உள்ள சக்ரத்தாழ்வாருக்கு ஆனி மாத சித்திரை நட்சத்திரமான நேற்று, சுதர்சன ஜெயந்தி உற்சவம் நடந்தது.
இதில், கோவிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு நேற்று, காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 சக்கரத்தாழ்வார் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுதர்சன ஜெயந்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.