/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மானாம்பதியில் 'சிசிடிவி' கேமரா அமைப்பு மானாம்பதியில் 'சிசிடிவி' கேமரா அமைப்பு
மானாம்பதியில் 'சிசிடிவி' கேமரா அமைப்பு
மானாம்பதியில் 'சிசிடிவி' கேமரா அமைப்பு
மானாம்பதியில் 'சிசிடிவி' கேமரா அமைப்பு
ADDED : ஜூலை 18, 2024 07:32 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - வந்தவாசி சாலையில், மானாம்பதி கிராமம் உள்ளது. மானாம்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நாட்களில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அதையடுத்து, அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, மானாம்பதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் பெருநகர் காவல் நிலையம் இணைந்து அப்பகுதியின் முக்கிய இடங்களில், 'சிசிடிவி' கேமரா அமைத்து குற்ற சம்பவங்களை கண்காணிக்க தீர்மானித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மானாம்பதி பேருந்து நிறுத்த சாலை பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய எட்டு இடங்களில் புதியதாக, 'சிசிடிவி' கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் மானாம்பதி ஊராட்சியில் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதோடு, திருட்டு, வழிப்பறி போன்றவற்றை குறைக்க வழி வகுக்கும் என அப்பகுதியினர் வரவேற்றுள்ளனர்.