/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரும் 26ல் மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு வரும் 26ல் மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
வரும் 26ல் மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
வரும் 26ல் மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
வரும் 26ல் மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:27 AM
சென்னை : தமிழ்நாடு மாநில சதுரங்க கூட்டமைப்பு ஆதரவுடன், ஜி.எம்.செஸ் அகடாமி சார்பில், சிறுவர் - சிறுமியருக்கான மாநில செஸ் போட்டி, இம்மாதம் 26ம் தேதி நடக்க உள்ளது.
போட்டிகள் 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவின் கீழ் நடக்கின்றன.
இதில், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனையருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
மற்ற பிரிவில் முதல் 20 இடம் பிடிக்கும் வீரர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ஆல்பா இன்டர்நேஷனல் பள்ளியில் ஒரு நாள் மட்டும் நடக்கும் இப்போட்டிகள், காலை 9:00 மணிக்கு துவங்கும் எனவும், விபரங்களுக்கு 8838229938 மற்றும் 9941514097 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.