/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் பிரம்மோற்சவம் துவக்கம் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஜூலை 04, 2024 09:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம், நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதில், தினமும் காலை மற்றும இரவு உற்சவத்தின்போது, சுவாமி அம்பிகையுடன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். ஜூலை 13ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது.