Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட அரைகுறை பணிகளை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட அரைகுறை பணிகளை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட அரைகுறை பணிகளை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட அரைகுறை பணிகளை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 11, 2024 10:54 PM


Google News
உத்திரமேரூர்:மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ், குடிநீர் திட்ட பணிகளை முறையாக செயல்படுத்தாததை கண்டித்து, உத்திரமேரூர் அடுத்த, படூர் கூட்டுச்சாலையில், பா.ஜ., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், அமராவதிபட்டிணம் கிராமத்தில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ், 4 ஆண்டுகளுக்கு முன் புதியதாக கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் பைப் பதித்தல் உள்ளிட்ட விடுபட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

உத்திரமேரூர் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்ட பணிகள், இதேபோன்று அரைகுறையாக உள்ளதை கண்டறிந்து விடுபட்ட பணிகளை முழுமைப்படுத்த வேண்டும்.

பாரத பிரதமரின் கனவு திட்டமான, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு காரணமான ஊராட்சி செயலர்கள் முதற்கொண்டு, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., தலைவர் ரஜினி தலைமையில் நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாபு, துணைத் தலைவர்கள் பிரபுராஜ், சோழனூர் ஏழுமலை, சங்கர் மாவட்ட செயலர் அமர்நாத், மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us