Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

ADDED : ஜூலை 24, 2024 10:49 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணேசா நகரில் உள்ள தும்பவனம் மாரியம்மன் கோவிலில், 39வது ஆண்டு விழா, நாளை காலை துவங்குகிறது.

காலை 9:00 மணிக்கு தும்பவனம் மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், பிற்பகல் 12:10 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான நாளை மறுநாள், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான வரும் 28ம் தேதி, காலை 7:00 மணிக்கு வரசக்தி விநாயகருக்கும், தும்பவனம் மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு அமமன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் தும்பவனம் மாரியம்மன் வீதியுலா வருகிறார். இரவு 10:00 மணிக்கும் கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பு நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us