/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கலைபொருட்கள் பராமரிப்பு பயிற்சி நிறைவு கலைபொருட்கள் பராமரிப்பு பயிற்சி நிறைவு
கலைபொருட்கள் பராமரிப்பு பயிற்சி நிறைவு
கலைபொருட்கள் பராமரிப்பு பயிற்சி நிறைவு
கலைபொருட்கள் பராமரிப்பு பயிற்சி நிறைவு
ADDED : ஜூன் 29, 2024 01:24 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, காஞ்சி புரம் அருங்காட்சியகத்தில் கலை பொருட்கள் பராமரிப்பு குறித்த பயிற்சி ஐந்து நாட்கள் நடந்தது.
இதில், களப்பயிற்சியாக கற்சிலைகளை பராமரித்தல், புதை பொருட்கள் குறித்த பயிற்சி வகுப்பு, ஓலைச்சுவடி பராமரித்தல், மனத்திறன் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், இரு நாட்கள் களப்பயணமாக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பல்லவர் கால கட்டுமானம் குறித்தும், கோவிலில் உள்ள சிற்பங்கள் குறித்தும் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் மாணவ- - மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.