ADDED : ஜூன் 17, 2024 04:10 AM

காஞ்சிபுரம், : வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் சார்பில், நேற்று, மரபு நடை பயணம் நடந்தது.
இந்த நிகழ்விற்கு, வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.
இந்த மரபு நடை பயணத்தில், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள தொல்லியல் துறை வரலாற்று பகுதிகளை பார்த்தனர்.
இந்த நிகழ்வில், காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.