ADDED : ஜூலை 02, 2024 10:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த லட்சுமிகாந்த பாரதிதாசன், கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
அவருக்கு பதிலாக, வேலுார் சரிபார்ப்பு அலுவலராக பணிபுரிந்து வரும் கருணாநிதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, சென்னை வட பழனி ஆண்டவர் திருக்கோவில் செயல் அலுவலராக இருந்த ஹரிஹரன், செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.