/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுகாதார தடுப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம் சுகாதார தடுப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
சுகாதார தடுப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
சுகாதார தடுப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
சுகாதார தடுப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
ADDED : ஜூன் 07, 2024 07:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து வட்டாரங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து, டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, 'மஸ்துார்' என அழைக்கப்படும் தற்காலிக சுகாதார தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 110 பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, பொது சுகாதார துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்காலிகமான இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், இரு மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்படும் உள்ளிட்ட எட்டு நிபந்தனைகளுடன் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தற்போது வரை பணியாளர்களை நியமிக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பணியாளர்கள், 'டெங்கு' உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபடுவர் என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.