/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிவாக்கம் சாலையில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு காஞ்சிவாக்கம் சாலையில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
காஞ்சிவாக்கம் சாலையில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
காஞ்சிவாக்கம் சாலையில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
காஞ்சிவாக்கம் சாலையில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 19, 2024 01:27 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், காஞ்சிவாக்கத்தில் இருந்து, வட்டம்பாக்கம் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
நாட்டரசம்பட்டு, உமையாள்பரனசேரி, சிறுவஞ்சுர், வளையக்கரணை உள்ளிட்ட பகுதி மக்கள், இந்த சாலை வழியே படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து அதிகமான சாலையில் தடுப்பு இல்லாத வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வளைவில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.