/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம் கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம்
கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம்
கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம்
கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 09, 2024 11:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், ஆனி திருமஞ்சனம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஆனி திருமஞ்சனம் நாளை நடைபெறுகிறது.
இதில், நாளை, மாலை 6:00 மணிக்கு, சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு மஞ்சள், மா, நெல்லி, பஞ்சாமிர்தல், நெய், தேன், பால்,இளநீர், தயிர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட 31 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், மஹா தீபாராதனை, வழிபாடும் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
ஆனி திருமஞ்சன உற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் செங்கல்வராயன் ஒற்றைவாடை தெரு ஆன்மிக பக்தர்கள் செய்துள்ளனர்.