/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அரசு மருத்துவமனையில் ரத்தசோகை விழிப்புணர்வு அரசு மருத்துவமனையில் ரத்தசோகை விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில் ரத்தசோகை விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில் ரத்தசோகை விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில் ரத்தசோகை விழிப்புணர்வு
ADDED : ஜூன் 21, 2024 12:22 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அரிவாள் செல் ரத்தசோகை விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த நோய், ஒரு நபரின் ரத்த சிவப்பணுக்கள் சிதைந்து அரிவாள் போன்ற வடிவத்தைப் பெறும் இந்நோய், 10 - 18 வயதுடையோரை பரவலாக பாதிக்கும்.
இந்நோயின் அறிகுறிகள், மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர் ராதிகா விளக்கம் அளித்தார். மேலும், கர்ப்பிணியருக்கும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை செய்வதன் வாயிலாக இந்த நோயை முன்னதாக கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றார்.,
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.