/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு
மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு
மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு
மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : ஆக 02, 2024 01:01 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை போன்ற அடிப்படை வசதிகளில் பல்வேறு பிரச்னைகள் நீடிக்கின்றன.
அவ்வாறு கண்டறியப்பட்ட தேவைகளின் அடிப்படையில், பள்ளி மேம்பாட்டு மானிய நிதியில், கழிப்பறை, வகுப்பறை போன்றவை கட்ட, மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
ஒலிமுகமதுபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்ட 30 லட்ச ரூபாயும், கே.வி.கே.,மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் கழிப்பறை கட்ட, 11.6 லட்ச ரூபாயும், குப்புசாமி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கழிப்பறை கட்ட 5.8 லட்சமும், தும்பவனம் மாநகராட்சி கழிப்பறை கட்ட 5.8 லட்சம் என, மொத்தம் 53.2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்தவுடன் பணிகள் துவங்கவுள்ளன.