/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் பூங்காவில் மதுபிரியர்கள் அட்டகாசம் உத்திரமேரூர் பூங்காவில் மதுபிரியர்கள் அட்டகாசம்
உத்திரமேரூர் பூங்காவில் மதுபிரியர்கள் அட்டகாசம்
உத்திரமேரூர் பூங்காவில் மதுபிரியர்கள் அட்டகாசம்
உத்திரமேரூர் பூங்காவில் மதுபிரியர்கள் அட்டகாசம்
ADDED : ஜூன் 29, 2024 10:08 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சின்ன நாரசம்பேட்டைதெருவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில், சமீபத்தில் புதிதாக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அடுத்த, மல்லியங்கரணையில் இயங்கும் அரசு மதுபான கடையில், மது பாட்டில்கள் வாங்கும் சில மதுபிரியர்கள், இந்த பூங்காவிற்கு வந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், இந்த பூங்கா வழியாக செல்லும் மாணவியர் மற்றும் பெண்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. மேலும், மதுபிரியர்கள் பயன்படுத்தும் மது பாட்டில்கள் மற்றும் திண்பண்ட உபயோக பிளாஸ்டிக் பொருட்களை மது அருந்தும் பூங்கா பகுதியிலேயே குவித்து செல்கின்றனர்.
எனவே, உத்திரமேரூர் கிருஷ்ணா நகரில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாவதை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் பூங்கா பகுதியில் ரோந்து வர உத்திரமேரூர் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.