/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லை வரையறுக்கும் பணி இழுபறி அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லை வரையறுக்கும் பணி இழுபறி
அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லை வரையறுக்கும் பணி இழுபறி
அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லை வரையறுக்கும் பணி இழுபறி
அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லை வரையறுக்கும் பணி இழுபறி
ADDED : ஜூன் 03, 2024 04:35 AM
சென்னை : அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் எல்லைகளை வரையறுத்து, கற்களை நடும் பணிகள் இழுபறியாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே துவங்கும் அடையாறு ஆறு 42.5 கி.மீ., பயணித்து, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களின் பிரதான நீர்வழித்தடங்களில் ஒன்றாக அடையாறு உள்ளது.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், கூவம் என்ற இடத்தில் துவங்கும் கூவம் ஆறு, 70 கி.மீ., பயணித்து சென்னையில், நேப்பியர் பாலம் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில், படகு போக்குவரத்துக்காக, சென்னையில் 5 கி.மீ.,க்கு பகிங்ஹாம் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இதை வடக்கு, தெற்கு, மத்திய பகிங்ஹாம் கால்வாய் என பிரித்து நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் வெள்ள நீரையும், மற்ற காலங்களில் கழிவு நீரையும் வெளியேற்றும் வடிகாலாக அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன.
அடையாறு, கூவம் ஆறுகளின் அகலம், 151 மீட்டரில் இருந்து 76 மீட்டராக பல இடங்களில் குறுகியுள்ளது. இவற்றை பழைய நிலைக்கு மீட்பதற்கான பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இந்த மூன்று நீர்வழித் தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைகளை வரையறுக்க, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அடையாறு, கூவம் எல்லைகளை வரையறுத்து, எல்லை கற்களை நடும்பணிக்கு 3.87 கோடி ரூபாயும், பகிங்ஹாம் கால்வாய் எல்லையை வரையறுக்கும் பணிக்கு 11.9 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக்கூறி, இப்பணிகளை சென்னை மண்டல நீர்வளத் துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர்.