/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலவாக்கம் பள்ளியில் கூடுதல் கட்டட பணி சாலவாக்கம் பள்ளியில் கூடுதல் கட்டட பணி
சாலவாக்கம் பள்ளியில் கூடுதல் கட்டட பணி
சாலவாக்கம் பள்ளியில் கூடுதல் கட்டட பணி
சாலவாக்கம் பள்ளியில் கூடுதல் கட்டட பணி
ADDED : ஜூன் 22, 2024 11:30 PM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், சாலவாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1,150 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லாததால், இட நெருக்கடிக்கு மத்தியில் இயங்குவதால் கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
அதன்படி,சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, இரண்டு வகுப்பறை, நான்கு ஆய்வகம், 2 கழிப்பறை என, 8 அறைகள் கொண்ட இரண்டு அடுக்கு மாடி கட்டடம் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ், 4.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் துவங்கிய பணியை, பருவமழை காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.