/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:56 AM
அயனாவரம், : அயனாவரம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்; ரயில்வே சீனியர் இன்ஜினியர். இவரது மனைவி ஸ்ரீதேவி, 52.
நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீதேவி வீட்டின் இரண்டாவது மாடியில் காயவைத்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு, கணவர் மற்றும் உறவினர்கள் வெளியே வந்து பார்த்தபோது, ஸ்ரீதேவி மூக்கில் காயங்களுடன் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தார்.
அவரை மீட்டு, ஐ.சி.எப்., ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.