ADDED : ஜூலை 16, 2024 11:41 PM
ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ், 23. நேற்று முன்தினம் இரவு, 'சி.டி. டீலக்ஸ்' பைக்கில் வேப்பேரி சென்றார்.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செங்காடு காந்திநகர் அருகே வந்தபோது, முன் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விழுந்தார். இதில், அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.