/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திடீரென அதிகரித்த மின்னழுத்தம் வெடித்து சிதறிய டியூப் லைட்டுகள் திடீரென அதிகரித்த மின்னழுத்தம் வெடித்து சிதறிய டியூப் லைட்டுகள்
திடீரென அதிகரித்த மின்னழுத்தம் வெடித்து சிதறிய டியூப் லைட்டுகள்
திடீரென அதிகரித்த மின்னழுத்தம் வெடித்து சிதறிய டியூப் லைட்டுகள்
திடீரென அதிகரித்த மின்னழுத்தம் வெடித்து சிதறிய டியூப் லைட்டுகள்
ADDED : ஜூன் 03, 2024 04:08 AM
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி கே.கே.நகர் மற்றும் தர்மராஜா நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த டியூப் லைட்டுகள் வெடித்துச் சிதறின.
இதனால் பயந்து போன அப்பகுதிவாசிகள், வீட்டின் மின் இணைப்பை துண்டித்து, இது தொடர்பாக கூடுவாஞ்சேரி உதவி செயற்பொறியாளருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்படி அப்பகுதிக்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள், வீடுகள் மற்றும் மின்மாற்றியில் ஆய்வு செய்தனர். அதில், அங்குள்ள மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திடீரென மின்னழுத்தம் அதிகரித்து, வீடுகளுக்கு உயர் அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சில வீடுகளில் டியூப் லைட், பல்புகள் உடைந்து சிதறியுள்ளன. மின்சாதன பொருட்களும் சேதமடைந்துள்ளன. நள்ளிரவு நேரத்தில் வந்த புகாரை அடுத்து, மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனால், கூடுவாஞ்சேரி சுற்றுப்புறப் பகுதிகளில், ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.