/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அந்தரத்தில் தொங்கும் மின் விளக்குகள் நெடுஞ்சாலை துறையி சரி செய்ய கோரிக்கை அந்தரத்தில் தொங்கும் மின் விளக்குகள் நெடுஞ்சாலை துறையி சரி செய்ய கோரிக்கை
அந்தரத்தில் தொங்கும் மின் விளக்குகள் நெடுஞ்சாலை துறையி சரி செய்ய கோரிக்கை
அந்தரத்தில் தொங்கும் மின் விளக்குகள் நெடுஞ்சாலை துறையி சரி செய்ய கோரிக்கை
அந்தரத்தில் தொங்கும் மின் விளக்குகள் நெடுஞ்சாலை துறையி சரி செய்ய கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2024 02:46 AM

காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு நான்குவழி தேசிய நெடுஞ்சாலை, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 2021ல் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் துவங்கின.
காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை மற்றும் கீழம்பி ஆகிய மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று உள்ளன. நிறைவு பெற்ற சாலை ஓரங்களில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
வெள்ளைகேட், ராஜகுளம், சேக்கான்குளம் ஆகிய கிராமங்களில், சாலையோரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், சேக்கான் குளம் அருகே சாலையோர மின்கம்பத்தில், ஒரு சில மின் விளக்குகள் உடைந்து அந்தரத்தில் தொங்குகின்றன.
இது, வாகன ஓட்டிகள் மீது விழுந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சாலையோரம் அந்தரத்தில் தொங்கும் மின்விளக்குகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.