/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் பிளம்பர், பசு மாடு, தெரு நாய் பலி மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் பிளம்பர், பசு மாடு, தெரு நாய் பலி
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் பிளம்பர், பசு மாடு, தெரு நாய் பலி
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் பிளம்பர், பசு மாடு, தெரு நாய் பலி
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் பிளம்பர், பசு மாடு, தெரு நாய் பலி
ADDED : ஜூன் 04, 2024 05:36 AM
சென்னை : உயர் மின் அழுத்த மின்வடம் அறுந்து விழுந்ததில், பிளம்பர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பசு மாடு மற்றும் தெரு நாய் ஆகியவையும் இறந்தன.
சென்னை, மேடவாக்கம், ஜல்லடியான்பேட்டை, பழண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகு, 46, பிளம்பர்.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கீழே விழுந்தது.
எதிர்பாராதவிதமாக, மின்கம்பியை மிதித்த ரகு மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ரகுவின் உடலை கைப்பற்றி, பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு பணியை, மின்வாரியத்தின் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.
போரூர் சுங்கச்சாவடி அருகே, சமயபுரம் பிரதான சாலையில் காலி மனை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் கனமழை பெய்த போது, அந்த பகுதியில் மின் கேபிள் திடீரென அறுந்து விழுந்து கிடந்தது.
நேற்று காலை, அந்த காலி மனை வழியாக நடந்து சென்ற பசு மாடு மற்றும் தெரு நாய் ஒன்று, அறுந்து கிடந்த மின் கேபிளை மிதந்தன. அப்போது, மின்சாரம் பாய்ந்த பசு மாடு மற்றும் தெரு நாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தன.
இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து, அறுந்து கிடந்த மின் கேபிளை சரி செய்தனர்.
மேலும், பசுமாட்டின் உரிமையாளர் யார் என, வானகரம் ஊராட்சி நிர்வாகமும், மதுரவாயல் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சாதாரண காற்றுக்கே மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசினால், பலகீனமான நிலையில் உள்ள மற்ற மின்கம்பிகளும் அறுந்து விபத்து ஏற்படுத்தலாம். மின்கம்பம், மின்கம்பி உள்ளிட்டவை சேதமின்றி இருக்கின்றனவா என, மின் வாரியம் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்.