Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ களர் உவர் நிலம் சாகுபடி கொண்டுவர புதுமுயற்சி 

களர் உவர் நிலம் சாகுபடி கொண்டுவர புதுமுயற்சி 

களர் உவர் நிலம் சாகுபடி கொண்டுவர புதுமுயற்சி 

களர் உவர் நிலம் சாகுபடி கொண்டுவர புதுமுயற்சி 

ADDED : ஜூன் 18, 2024 11:10 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், 1.20 ஏக்கர் நிலங்களில் நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பல வித பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நெல், வேர்க்கடலை, கம்பு, உயிர் உரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வேளாண் இடு பொருட்கள், அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி, ஊக்குவித்து வருகிறது.

இருப்பினும், களர் உவர் நிலங்களை முழுமையாக விவசாயத்திற்கு கொண்டு வர முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் விவசாயிகள் நிலங்களை தரிசாக போடக்கூடாது என, ஏதேனும் பயிரிட்டு குறைந்த மகசூல் பெற்று வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் நெல், தென்னை, வாழை ஆகிய பயிர்களை பயிரிட்டு, மகசூல் இழப்பீட்டை சந்தித்து வருகின்றனர்.

இதனால், களர் உவர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், விவசாயத்தில் பெரிய அளவில் லாபம் பெற முடியவில்லை என, புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தவிர்க்க, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம்' என்கிற திட்டத்தை அரசு துவக்கி உள்ளது.

இந்த திட்டத்தில், பசுந்தாள் உரம் வளர்ப்பு, மண்புழு உரம் உற்பத்தி செய்தல், பூச்சி விரட்டி செடிகளை சாகுபடி செய்தல், களர் உவர் நிலத்தின் மண் வளத்தை மேம்படுத்த ஜிப்சம் உரம் வழங்குதல் ஆகிய பலவித சலுகைகள் வழங்குகின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 6,000 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் வளர்க்க தக்கைப்பூண்டு விதை வழங்குதல். தலா, 20 கிலோ வீதம் பசுந்தாள் உரம் வழங்கப்பட உள்ளது.

விளை நிலங்களை சுற்றிலும், 90,000 எண்ணிக்கையில், வேம்பு, புங்கன் ஆகிய மரங்களை வளர்த்தல். வயல்கள் ஓரம் ஆடாதொடா, நொச்சி ஆகிய பூச்சி விரட்டி பயிர்களை சாகுபடி செய்வதற்கு, 50 சதவீதம் மானியம் வழங்கி அரசு ஊக்குவிக்க உள்ளது.

இதன் வாயிலாக, களர் உவர் நிலங்களையும் சாகுபடி பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என, வேளாண் துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும், 1.20 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். மாவட்டத்தின் சாகுபடி பரப்பு 20,000 ஏக்கர் வரையில் அதிகரிக்கும் என, துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us