/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான 'நாப்கின்' வீணடிப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான 'நாப்கின்' வீணடிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான 'நாப்கின்' வீணடிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான 'நாப்கின்' வீணடிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான 'நாப்கின்' வீணடிப்பு
ADDED : ஜூலை 22, 2024 02:11 AM

மேடவாக்கம்,:மேடவாக்கத்தில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுத்தப்படுகிறது. தினமும் 500 புறநோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் 150 கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
பிரசவ நேரத்தில் கர்ப்பிணியருக்கு வழங்குவதற்காக, சுகாதார நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நாப்கின் வீணாகியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் பருவமடைந்த மாணவியர், மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களுக்கு, 2011ம் ஆண்டு முதல், அரசு சார்பில் இலவசமாக 'நாப்கின்' வழங்கப்படுகிறது.
கிராமப்புற பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், மேடவாக்கம் சுகாதார நிலையத்தில் பெட்டி, பெட்டியாக நாப்கின்களில் கரையான் அரித்தும், தண்ணீரில் நனைந்தும் வீணாகி கிடக்கின்றன.
பல அரசு மருத்துவமனைகளில், 'நாப்கின்' இல்லாமல், வெளியே காசு கொடுத்து பெண் நோயாளிகள் வாங்கும் நிலையில், ஆயிரக்கணக்கான நாப்கின்கள் இங்கு வீணாகியிருப்பது, சுகாதாரத்துறையின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவ நிர்வாகத்தினர்கூறுகையில், 'மிக்ஜாம் புயலின்போது, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வழங்கப்பட்டதுபோக, மீதம் இருந்ததை கிடங்கில் வைக்கப்பட்டன.
'பெரு வெள்ளத்தில் கிடங்கில் தண்ணீர் புகுந்ததால், நாப்கின் வீணானது. இவற்றை அகற்ற உள்ளோம்' என்றனர்.